கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானம் அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் தாண்டி சென்னை கடற்கரையின் பரப்பு வரை சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று புதிய தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் இன்னும் விலகவில்லை. தற்போதைய நிலையில் விமானம் சீனாவிற்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பியுள்ளது என்றும் எனவே இந்திய கடல்பகுதியில்தான் அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கும் என்றும், அந்தமான் தீவுகள் முதல் சென்னை கடலோரப்பகுதிகள் வரை தேடுதல் வேட்டை நடத்துமாறும் மலேசிய அரசு, இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது தேடுதல் பணியில் இருக்கும் 13 நாடுகளின் மீட்புப்படையினர்களின் பார்வையும் இந்திய கடல்பகுதியில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 300 கி.மீ கடல்பரப்பு வரை தேடுதல் பணியை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்திய விமானப்படையின் லேட்டஸ்ட் விமானமான P-8I ரக விமானம் உள்பட மூன்று ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டைக்கு ஆபரேஷன் சியர்ச்லைட் (‘Operation Searchlight) என இந்திய ராணுவம் பெயரிட்டுள்ளது.