மலேசிய விமானக்கடத்தலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உடந்தையா? திடுக்கிடும் தகவல்

4aa

 

மலேசிய விமானம் சென்ற வாரம் சனிக்கிழமை கோலாலம்பூரில் இருந்து சீனா செல்லும் வழியில் கடத்தப்பட்டது என்பதை மலேசிய அரசு தற்போது உறுதி செய்துள்ளது. விமானத்தின் முக்கிய பைலட் மார்ச் 7ஆம் தேதி, அதாவது விமானம் கடத்தப்பட்டதற்கு முந்தைய நாள், மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் அவர்களை சிறையில் ரகசியமாக சந்தித்தது தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே தற்போது மலேசிய அதிகாரிகளின் பார்வை முழுவதும் பைலட்டை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பைலட்த்தான் விமானத்தை திட்டமிட்டு கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று மலேசிய அதிரடிப்படையினர் விமானியின் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அதில் சில முக்கிய தடயங்கள் சிக்கியதாக தெரியவந்துள்ளது.

விமானம் தற்போது இந்திய தீபகற்ப பகுதியில் அல்லது பாகிஸ்தான் பகுதியில்தான் பத்திரமாக இருக்கும் என்றும், இதுவரை கடத்தப்பட்டவர்களிடம் இருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்றும், கூறப்படுகிறது. அதேபோல் பயணிகள் எல்லோரும் இதுவரை பத்திரமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மலேசிய அரசு விமானக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளா.

Leave a Reply