48 மணி நேரத்தில் தாய் மற்றும் தந்தையை அடுத்தடுத்த இழந்த அமெரிக்க சகோதரிகள்.

6

Oklahoma என்ற பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரிகள் அடுத்தடுத்த நாட்களில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்ததால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களின் எதிர்கால தேவைக்காக நாடு முழுவதிலும் இருந்து நிதி குவிந்து கொண்டு வருகிறது.

6b

அமெரிக்காவின் Oklahoma என்ற பகுதியை சேர்ந்த 16 வயது எமிலி மற்றும் 11 வயது ஹாலி ஆகிய இரண்டு சகோதரிகளின் தாயார் ரோஸி கூப்பர் என்பவர் மார்ச் 5ஆம் தேதி உடல்நலம் இன்றி மரணம் அடைந்தார். தாயார் இறந்த சோகத்தில் இருந்த இந்த சகோதரிகளுக்கு அடுத்த நாளே பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மறுநாள் இந்த சகோதரிகளின் தந்தை ஜான் கூப்பர் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

6a

48 மணிநேரத்தில் தாய் மற்றும் தந்தைய இழந்த இந்த சகோதரிகளின் நிலையை கண்டு பரிதாபம் அடைந்த அமெரிக்க மக்கள் ஆன்லைன் மூலம் இந்த சகோதரிகளுக்கு நிதி வழங்கி உதவி வருகின்றனர். ஒரே நாளில் 12,000 அமெரிக்க டாலர்  நிதி குவிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிதி அந்த சகோதரிகளை ஆறுதலடைய செய்யுமா? தாய் தந்தையை இழப்பை இந்த நிதி ஈடு செய்யுமா? என்பது கேள்விக்குறிதான்.

Leave a Reply