உலகக்கோப்பை 20 ஓவர்கள் போட்டி. வங்கதேசத்தில் இன்று தொடக்கம்.

 

12உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்கதேச நாட்டில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கு இந்த போட்டிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடக்கும். போட்டிகள் டாக்கா, சிட்டாகாங் மற்றும் சில்ஹெட் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடக்கும்.

முதல்முறையாக இந்த போட்டியில் 16 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. இவற்றில் எட்டு அணிகள் நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதி இரண்டு அணிகள் லீக் சுற்று முடிவில் தேர்ந்தெடுக்கப்படும்.

சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள எட்டு அணிகள்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மற்றும் மேற்கிந்திய தீவுகள்

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், அயர்லாந்து, நேபால், நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் ஜிம்பாவே அணிகளில் இருந்து இரண்டு அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு தேர்தெடுக்கப்படும்.

சூப்பர் 10 போட்டிகளில் இரண்டு குரூப்கள் உள்ளது. முதல் குரூப்பில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் லீக் தகுதி போட்டிகளில் வெற்றி பெறும் ஒரு அணி என ஐந்து நாடுகளும், இரண்டாவது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் லீக் போட்டிகளில் தகுதி பெறும் ஒரு அணி ன ஐந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இன்றைய முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது போட்டியில் பாகிஸ்தானுடன் வரும் 21ஆம் தேதி மோதுகிறது.

Leave a Reply