இதுவரை ராஜ்யசபா எம்.பி தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு வந்த பாமக கட்சி தலைவர் ராமதாசின் மகன் அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக மக்களை சந்தித்து தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளார். அவருக்கு தருமபுரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் பாமக கட்சிக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் முடிவாகாத நிலையில் இன்று அக்கட்சி, தருமபுரி தொகுதிக்கு அன்புமணி ராமதாஸை வேட்பாளராக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தன்னிச்சையாக தே.மு.தி.க ஐந்து தொகுதிகளில் வேட்பாளரை அறித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஆகும். இந்நிலையில் பாமகவும் தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், அந்த கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி க்கு திருப்பூர் கடி ஒதுக்கப்பட்டுள்ளதால் தேமுதிக அதிர்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர் தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. ஆனால் திருப்பூர் தொகுதி தங்களுக்கு கொடுக்காவிட்டால், தாங்கள் தனித்து நிற்க இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.