உலக அளவில் பிரபலமாக இருக்கும் TasteofCinema என்ற இணையதளம், உலகின் மிகச்சிறந்த திரை இசைப்பாளர்கள் 25 பேர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் 25 பேர்களில் ஒரே ஒருவர் மட்டுமே இந்தியர். அவர்தான் நம் இசைஞானி இளையராஜா.
இளையராஜா குறித்து அந்த இணையதளம் குறிப்பிடும்போது, இந்தியாவில் பல மொழிகளில் இதுவரை 4500 பாடல்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி, மொத்தம் 950 இந்திய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசைக்காகவே வெற்றிப்பெற்ற படங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர்,
இந்த இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடத்தை கொடுத்துள்ளது. உலக அளவிலான இசையமைப்பாளர்களில் 9வது இடம் பெற்று இந்தியர்களுக்கும், தமிழர்களூக்கும் பெருமை தேடித்தந்த இளையராஜா அவர்களை சென்னைடுடேநியூஸ் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இசையமைப்பாளர்களின் பெயர்கள் வருமாறு:
1. Ennio Morricone
2. Max Steiner
3. John Williams
4. Bernard Herrmann
5. Nino Rota
6. Tōru Takemitsu
7. Michel Legrand
8. Alan Menken
9. Ilayaraja
10. Jerry Goldsmith
11. Maurice Jarre
12. John Barry
13. Hans Zimmer
14. Joe Hisaishi
15. James Horner
16. Georges Delerue
17. Dimitri Tiomkin
18. Elmer Bernstein
19. Howard Shore
20. Thomas Newman
21. Danny Elfman
22. Philip Glass
23. James Newton-Howard
24. Vangelis
25. Alan Silvestri