மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த தைவான் பல்கலை மாணவர்கள்.

article-2583807-1C655E2800000578-43_634x399

மலேசிய விமானம் MH370 கடந்த 8ஆம் தேதி மாயமாய மறைந்து போனது. அதுமுதல் அந்த விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க 26 நாடுகள் சேர்ந்த குழுக்கள் முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாண்வர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்து reddit என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர்.

article-2583807-1C655E2D00000578-616_634x402

இன்னும் அந்த புகைப்படத்தில் இருப்பது மாயமான மலேசிய விமானம்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை எனினும், அந்த விமானம் அதுவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இந்த செய்தி தெரிந்த அந்த பகுதி கிராம உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் தாழ்வாக ஒரு விமானம் பறந்து சென்றதை பார்த்ததாகவும் கூறினார்கள். மாலத்தீவு அருகேயுள்ள Dhaalu Atoll என்ற தீவை சேர்ந்த பொதுமக்கள் பலர் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாகவும் கூறுகின்றனர். இந்த பரபரப்பான செய்திகளால் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

Leave a Reply