விக்கிபீடியா இணையதளத்தில் தன்னை பற்றிய தவறான தகவல் உள்ளது என்றும் உண்மையில் தன்னுடைய பிறந்த நாள் மார்ச் 18ஆம் தேதி இல்லை என்றும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் தன்னுடைய உண்மையான பிறந்தநாள் மே 25ஆம் தேதி என்றும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து பிரபல இணையதளங்களும் தனக்கு மார்ச் 18 அன்று பிறந்தநாள் என்று தவறாக செய்திகள் வெளியிட்டிருந்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார். மேலும் தனக்கு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தது போல 75 வயது இல்லை என்றும் அதைவிட வயது குறைவுதான் என்றும் கூறினார். ஆனால் அவருக்கு உண்மையில் எத்தனை வயது என்பதை கூற மறுத்துவிட்டார்.
கவுண்டமணி நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது 49ஓ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து நகைச்சுவையில் கலக்கவிருப்பதாகவும் கூறினார்.