இந்தியன் ரயில்வே இணையதளம் மூலம் மிக அதிகபட்சமாக இன்று ரயில் டிக்கெட்டுக்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியன் ரயில்வே இன்று ஒரே நாளீல் சுமார் 5.80 லட்சம் ரயில் டிக்கெட்டுக்களை இணையதளம் மூலம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி 5.72 லட்சம் ரயில் டிக்கெட்டுக்களை இணணயதளம் மூலம் விற்பனை செய்ததே இதுவரை சாதனையாக கருதப்பட்டது.
இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த IRCTC செய்தி தொடர்பாளர், “தினமும் சராசரியாக 9.47 லட்சம் பயணிகளுடன், 4.63 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், இது கடந்த 2013 ஆம் ஆண்டு 6.86 லட்சம் பயணிகளுடன் 3.85 லட்சம் டிக்கெட்டுகளாக இருந்ததாகவும் கூறினார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 20 சதவிகித ரயில்பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.