பாரதிய ஜனதா கட்சியுடன் கூடிய விரைவில் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ஆம் ஆத்மி கட்சியை இணைத்துவிடுவார் என டில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சத்தின் மகன் சந்தீப் தீட்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார். உண்மையில் அவர் மோடிக்கு ஆதரவாகவெ காய் நகர்த்தி வருகிறார். குஜராத் கலவரம் குறித்து கேள்விகள் எழுப்பாமல் மதச்சார்பற்ற ஓட்டுக்களை பிரித்து மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் சாதகமாக மக்கள் மனம் திரும்பும் வகையில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அடுத்த சில ஆண்டுகளில் கண்டிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ஆத்மி கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்து கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரை நம்பி பொதுமக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.