ஆஸ்திரேலிய கடலில் மலேசிய விமானத்தின் துண்டுகள் வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து உலக நாடுகளின் முழு கவனமும் தற்போது அந்த பகுதியை நோக்கி திரும்பியுள்ளது. மொத்தம் 29 மீட்பு விமானங்கள், 21 அதிநவீன வசதிகள் உள்ள கப்பல்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் ஆஸ்திரேலிய கடற்பகுதியை நோக்கி விரைகின்றன.
ஆஸ்திரேலியாவும் தனது பங்குக்கு ஐந்து ராணுவ விமானங்களை தேடுதல் பணிக்காக நேற்று பெர்த் நகரில் இருந்து கிளம்பியது. இன்று காலை 7மணியளவில் மற்றொரு ஜெட் விமானமும் துண்டுகள் விழுந்த இடத்தை நோக்கி செல்லவிருப்பதாக ஆஸ்திரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று மாலை 4மணிக்கு US Navy Poseidon aircraft குறிப்பிட்ட அந்த பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்து சோதனை நடத்தவுள்ளது. அனேகமாக இன்று மாலைக்குள் ஆஸ்திரேலிய கடலில் இருப்பது விமானமா? என்பது உறுதிபட தெரிந்துவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
சீனா தன்னுடைய மூன்று போர்க்கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு விரைந்து அனுப்பியுள்ளது. மாயமான விமானத்தில் அதிகமாக இருந்தது சீனப்பயணிகளே. எனவே இந்த விமானத்தை தேடுவதில் சீனா அதிக அக்கறை காட்டி வருகிறது.