மத்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் கே.சி.சக்ரவர்த்தி இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா முடிவை ஏன் எடுத்தார் என்பது புரியாத மர்மமாக உள்ளது..
கே.சி.சக்ரவர்த்தி ஏற்கனவே வரும் ஏப்ரல் 25ம் தேதியே தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு ரிசர்வ் வங்கி நிர்வாகத்தை சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு பணி ஒன்று அவரை தேடி வந்ததாகவும், அதற்காகவே அவர் முன்கூட்டியே ராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சக்ரவர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுனர் பொறுப்பை ஏற்றார். அவர் தனது பணிக்காலத்தில் கடுமையான விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்து வந்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.