இந்தியாவின் சொத்துக்களை சூறையாடினார் சோனியா. மேனகா காந்தி தாக்குதல்

maneka mayawati sonia

இந்தியாவுக்கு சொந்தமான சொத்துக்களை இத்தாலியில் இருந்து வந்து சோனியா சூறையாடியுள்ளார் என சோனியா காந்தி மீது ஆவேசமான தாக்குதலை தொடர்ந்திருக்கிறார் மேனகா காந்தி.

சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி,  பா.ஜனதா சார்பில் பிலிபிட் என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் மேனகா காந்தி பேசினார். அதில் “சோனியாகாந்தி இந்த  நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து வரும்போது சீதனமாக ஒரு பைசா கூட இல்லாமல் வெறும் கையை வீசிக் கொண்டுதான் வந்தார். ஆனால் இன்று அவர் உலகப் பெண்மணிகளில் 6-வது பணக்காரராக உள்ளார் என்று பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சோனியாவுகு இவ்வளவு பணம்  எப்படி வந்தது?

இந்திய மக்கள் அனைவரும் அவர் மீது அன்பு மழை பொழிந்தனர். ஆனால் அதற்கு பதிலா சோனியா இந்தியாவின் சொத்துக்களை சூறையாடி இத்தாலியில் பதுக்கி வருகிறார். அவர் மட்டுமின்றி  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள்  ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு  இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர்” என்றார்

Leave a Reply