தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் இன்றியமையாத ஒரு ஊடகமாக மாறிவிட்டது. எந்த ஒரு விஷயமும் ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டரில் பதிவு செய்தால் அதற்கு உடனடியாக விளைவு கிடைக்கும் என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம்.
இந்நிலையில் துருக்கி நாட்டில் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் டுவிட்டரின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் ஊழல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகின்றனர். திருடன், திருடனின் மகன் என்ற பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி, பிரதமர் மீதும் அவரது மகன் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் எர்டோகன், கோர்ட் அனுமதியுடன் டுவிட்டர் இணையதளத்தை தடை செய்தார். துருக்கி பிரதமரின் இந்த நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
ஆனால் துருக்கி எதிர்க்கட்சிகள் சிறிதும் மனம் தளரவில்லை. மொபைல் போனில் குரூப் மெசேஜ் மூலம் ஊழல் ஆதாரங்களை நாட்டு மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே சீனா டுவிட்டரை தடை செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் தற்போது துருக்கியும் இணைந்துள்ளது.