வலி வந்தது போல் நடிப்பவர்களை காட்டிக்கொடுக்கும் சாப்ட்வேர்.

13

பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் இனிமேல் வயிறு வலிக்கின்றது, தலை வலிக்கின்றது என்று பொய் சொல்லி விடுமுறை போட முடியாது. மனிதர்களுக்கு ஏற்படும் வலி உண்மையானதா? அல்லது நடிப்பா? என்பதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் ஒன்றை அமெரிக்காவின் கலிபோர்னியா பலகலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.

மனிதர்களுக்கு உண்மையில் வலி ஏற்படும்போது அவர்களின் முகத்தில் இருந்து வெளிப்படும் உணர்ச்சிகள் எப்படி இருக்கும், அவரகளின் ரியாக்ஷன் என்ன என்பதை இந்த சாப்ட்வேர் 85% சரியாக கணித்து சொல்கிறது.

வலி ஏற்பட்டவர்கள் அல்லது வலி ஏற்பட்டது போல நடிப்பவர்களது வாய் மற்றும் முகம் அசைவதை வைத்து இது கண்டுபிடிக்கப்படுவதாக இந்த சாப்ட்வேரை வடிவமைத்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் கூறியுள்ளார்.

Leave a Reply