ராஜபாளையத்தில் நடந்த காதணி விழாவில் கலந்து கொண்ட மு.க.அழகிரி, ‘ திமுக கட்சியையும், அதன் தலைவர் கருணாநிதியையும், காப்பாற்றுவதே தனது முதல் கடமை என்று கூறியுள்ளார்.
திமுகவில் தலைவர் கருணாநிதிக்கு தெரியாமலேயே பலவிஷயங்கள் நடந்துவருகிறது. இதற்கெல்லாம் யார் காரணம் என்பது உலகிற்கே தெரியும். அவர்களிடம் இருந்து கட்சியையும், தலைவர் கருணாநிதியையும் காப்பாற்றுவதே எனது முதல் வேலை.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வரும்போது எனது வீட்டிற்கு வர திமுக தலைவரை அழைப்பு விடுத்துள்ளேன். எனது வீட்டிற்கு வந்தால் அவரையே கட்சியை விட்டு நீக்கி சதி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தென்காசி வேட்பாளர் கிருஷ்ணசாமி 3 வது இடத்தை கூட பிடிக்க மாட்டார். அவரை நாங்கள் தோற்கடிப்போம். வைகோவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆதரவாளர்களுடன் கலந்து பேசி சொல்வதாக கூறியுள்ளேன்.
இவ்வாறு ராஜபாளையத்தில் மு.க.அழகிரி பேசியுள்ளார்.