மலேசிய விமானம் கடந்த 8ஆம் தேதி காணாமல் போனதாகவும் அதை உலக நாடுகளின் மீட்புப்படைகளும் தீவிரமாக தேடிக்கொண்டு வருவதாகவும் தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டு உள்ளது. ஆனால் ரஷ்யாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை ‘விமானம் காணமால போனதாக மலேசிய அரசு நடத்துவதே ஒரு நாடகம் என்றும், உண்மையில் அந்த விமானம் எங்கிருக்கின்றது என்பது அரசுக்கு தெரியும்,திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளது.
இந்தியா தற்போது உலக நாடுகளின் மத்தியில் வலிமையுள்ள நாடாக மாறி வருவதால், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும், இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்க்கவும் சீனா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் முயன்று வருகின்றது.
இந்நிலையில் காணமல் போன மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக பொய்யான ஒரு செய்தியை பரப்பிவிட்டு, அனைத்து நாடுகளும் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் அருகே தேடுவது போல இந்தியாவின் ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ள நடத்தப்படும் நாடகமே இது என்று அந்த பத்திரிகை சந்தேகம் தெரிவித்துள்ளது.
உண்மையில் விமானம் கடத்தப்படவும் இல்லை, விபத்துக்குள்ளாகவும் இல்லை என்றும், மலேசிய அரசு உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி மர்மமான இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும், அதனால்தான் மலேசிய முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி குழப்புகின்றது என்றும் கூறியுள்ளது. இந்த சதிச்செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் உடந்தை என்கிறது அந்த ரஷ்ய பத்திரிகை.
இந்த தகவலுக்கு பிறகாவது இந்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய பத்திரிகை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.