அமெரிக்காவில் சிகாகோ நகரில் இன்று காலை தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து பிளாட்பாரத்திற்குள் புகுந்தது. பிளாட்பாரத்தின் நடுவில் இருந்த எஸ்கலேட்டர் என்ற நகரும் படிக்கட்டின் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து காரணமாக 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ரயில் நிலையத்தில் அதிகாலை 2.30 மணியளவில் தண்டவாளத்தில் சில பாரமரிப்பு பணிகளை ரயில்வே ஊழியர்கள் செய்துள்ளனர். அதன்பின்னர் சரியாக ரயில் தண்டவாளத்தை இணைக்காமல் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உடனடியாக சிகாகோ ரயில்வே உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.