நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி.,

new vs sa

உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி டுமினியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களீல் 168 ரன்கள் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் வெறும் 6 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில் இருந்த நியூசிலாந்து அணி, 20 ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்தது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் ஸ்டெயின் மிக அபாரமாக 20 ஓவரை பந்துவீசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

ஆனாலும் ஆட்டநாயகனாக 86 ரன்கள் எடுத்த டுமினி தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி நெதர்லாந்து அணியை மிக எளிதில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

நெதர்லாந்து அணி  – 39/10  10.3 ஓவர்கள்
இலங்கை அணீ       40/1   5 ஒவர்கள்

ஆட்டநாயகன் மாத்யூஸ் (இலங்கை)

Leave a Reply