காங்கிரஸை ஆதரிக்க தயார்.அழகிரி-காங்கிரஸ் உறவை உடைக்க கருணாநிதியின் அதிரடி அறிவிப்பு.

7நேற்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் திமுகவும், அதிமுகவும் காங்கிரஸ் கட்சியின் எதிரிகள் அல்ல என்றும், தங்களின் ஒரே குறிக்கோள் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது மட்டும்தான் என பேசினார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எவ்வித ரியாக்ஷனும் வராத நிலையில் திமுகதலைவர் கருணாநிதி காங்கிரஸுக்கு சாதகமாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, தான் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி மீண்டும் எங்கள் கொள்கையுடன் ஒத்து வந்தால், அக்கட்சியை திமுக மீண்டும் ஆதரிக்கும் என கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து பேசிய கருணாநிதி, ‘நன்றியுணர்வு சிறிதும் இல்லாமல் போனதால்தான் காங்கிரஸ் கட்சி இன்று அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதாகவும், 2ஜி ஊழல் விஷயத்தில் காங்கிரஸ் தங்கள் கட்சியினர்களை பாடாய் படுத்தியிருந்த போதிலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய, தேவைப்பாட்டால் உரிய நேரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமக்கு கட்சியின் கொள்கைகள் மட்டுமே முக்கியம் என்றும், அண்ணன், தம்பி, குடும்பம், குழந்தைகள் எல்லாம் முக்கியமல்ல என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

தற்போது திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியை காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து தங்கள் ஆதரவு கேட்டு வருவதால், அவர்களை திசைதிருப்ப கருணாநிதி செய்யும் நாடகம் என காங்கிரஸார் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply