50 அடி உயரத்தில் இருந்து சிறு குழந்தைகளை தூக்கி கீழே போடும் சடங்கு ஒன்றை சோலாப்பூர் நகரில் கடந்த சில வருடங்களாக அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சோலாப்பூர் நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லீம் திருவிழா ஒன்று வருடந்தோறும் நடைபெறுகிறது. பாபா உமர் துர்கா என்ற இந்த திருவிழாவை இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து கொண்டாடுகின்றனர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை 50 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே ஒருவர் தூக்கி எறிகிறார். அதை கீழே உள்ள சிலர் பெட்ஷீட்டின் உதவியால் பிடிக்கின்றனர். சிறிது தவறினாலும் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் இந்த சடங்கை நடத்த பல பெற்றோர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்பதுதான் அதிசயம்.
இந்த சடங்கு நிகழ்த்துவதால் தங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியமாக வளரும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.
தற்போது இந்த விழா குறித்த அதிர்ச்சி வீடியோ வெளிவந்துள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி எடுக்கப்படும் என அப்பகுதி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
[embedplusvideo height=”400″ width=”650″ editlink=”http://bit.ly/1gG4ztM” standard=”http://www.youtube.com/v/T8uL2fKKvo0?fs=1″ vars=”ytid=T8uL2fKKvo0&width=650&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1906″ /]