மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ஆம் தேதி கிளம்பிய MH370 என்ற விமானம் எங்கே உள்ளது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு தகவல்களை கூறி, மீட்புப்படையினர்களை குழப்பி வருகின்றன.
இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு, நியூசிலாந்து நாட்டின் ராணுவ விமானம் Air Force Orion, மலேசிய விமானம் விழுந்த இடத்தை மிகத்துல்லியமாக கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து தங்கள் நாட்டின் ராணுவ தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து ராணுவ விமானம் எடுத்த புகைப்படம், முன்பு ஆஸ்திரேலியா கூறிய இடத்தில் இருந்து 1000 கி.மீ தூரத்திற்கும் மேல் உள்ள ஒரு ஆபத்தான இடம் ஆகும். நியூசிலாந்தின் ராணுவ விமானம் மிக அருகில் இருந்து இந்த புகைப்படம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தை ஆய்வு செய்த பின்னர் மலேசிய அரசுக்கு அனுப்ப நியூசிலாந்து முடிவு செய்துள்ளது. அதன்பின்னர் உலக நாடுகளின் மீட்புப்படைகள் அந்த இடத்தை நோக்கி விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1h32dPQ” standard=”http://www.youtube.com/v/1KvfR-D9Gd4?fs=1″ vars=”ytid=1KvfR-D9Gd4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7660″ /]