அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அந்நாட்டு நேரப்படி இரவு 9.09 மணிக்கு 5.1 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே நடுநடுங்கியுள்ளது. சாலைகளில் கண்ணாடிகள் உடைந்து கிடைப்பதாகவும், பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே அலறியபடியே வெளிவந்ததாகவும், ஃபேஸ்புக், மற்றும் இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.
பூகம்பத்தின் சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை எனினும், 8 பேர் மரணம் அடைந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க அதிரடி படையினர் உடனடியாக அணைகள், பாலங்கள் மற்றும் ரயில் பாதைகள் போன்றவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்ய விரைந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருசில கட்டிடங்கள் இடிந்திருப்பதாகவும், சாலைகளில் மரங்கள் மற்றும் மின்சார வயர்கள் குறுக்கே விழுந்து கிடப்பதாகவும் பல இடங்களில் இருந்து மீட்புப்படையினர்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
கடைசியாக வந்த தகவலின்படி 360 மில்லியன் டாலர் சொத்து மதிப்புகள் சேதமடைந்திருப்பதாகவும், 8 பேர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி உயிர் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.