ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய போர் விமானம் ஒன்று குவாலியர் அருகே விபத்துக்குள்ளாகி ஐந்து முக்கிய ராணுவ அதிகாரிகள் பலியாகினர். அந்த விமானமும் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவுக்கு நொறுங்கி சேதமடைந்தது.
அமெரிக்க தயாரிப்பான C-130J என்ற போர்விமானம் ஒன்றின் மதிப்பு ரூ.1000 கோடியாகும். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய அரசு ஆறு விமானங்களை ரூ.6000 கோடிக்கு வாங்கியது. அவற்றில் ஒன்று நேற்று குவாலியரில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் பயணம் செய்த நான்கு அதிகாரிகள் மற்றும் பைலட் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து காரணமாக இந்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, விமானப்படை தளபதி அரூப் ராஹா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி இதே வகை விமானங்கள் மேலும் ஆறு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
[embedplusvideo height=”400″ width=”500″ editlink=”http://bit.ly/1jLmGkd” standard=”http://www.youtube.com/v/NYnymXLB0ko?fs=1″ vars=”ytid=NYnymXLB0ko&width=500&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4118″ /]