பா.ஜ.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம். பாமக திடீர் போர்க்கொடி

pmkதமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் நிலவி வருகிறது. அந்த குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சியான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து பாரதிய ஜனதாவின் இன்னொரு கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதனால் விஜயகாந்த் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்வதை தவிர்த்தார்.

இந்நிலையில் கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் பாமகவுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், அதனால் கோவை பாரதிய ஜனதா வேட்பாளருக்கு பாமக பிரச்சாரம் செய்யாது என்றும் அதிரடியாக கூறியுள்ளது. இதனால் பாரதிய ஜனதா அதிர்ச்சி அடைந்துள்ளது.

சிதம்பரம், கடலூர் போன்ற தொகுதிகளிலும், பாமகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தேமுதிகவினர் தயங்கி வருகின்றனர். இதனால் பாரதிய ஜனதா மேலிடம் இன்று கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டணியில் இருந்துகொண்டே குழப்பங்கள் செய்தால், கூட்டணி தலைமை சம்மந்தப்பட்ட கட்சியை கூட்டணியில் இருந்து நீக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை பொதுவாக கூறப்பட்டிருந்தாலும், அது பாமகவை குறிவைத்தே கூறப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்புடன் கருத்து எழுந்துள்ளது.

Leave a Reply