சோனியா காந்திக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் அமெரிக்க அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே பதவி விலகியதாக கூறப்படுகிறது.
வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்பார் என அமெரிக்க ஊடகங்கள் யூகித்து வரும் நிலையில் மோடியுடன் இணக்கமான உறவை பெற அமெரிக்க அரசு விரும்புகிறது. ஆனால் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததால், அவரை பதவியில் இருந்து விலகும்படி அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்தது. இதன் காரணமாக நேற்று தனது ராஜினாமா கடிதத்தை நான்சி பவல் ஒபாமாவிற்கு மெயில் மூலம் அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
67 வயதான நான்சி பவல் சென்ற மாதம் நரேந்திர மோடிய அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. புதிய தூதர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அமெரிக்க அரசு அதிகாரிகள்தெரிவித்தன.ர்