முன்னாள் தமிழக டி.ஜி.பி ஆர்.நட்ராஜ் அதிமுகவில் இணைந்தார்.

natraj

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழக அரசின் முன்னாள் டிஜிபியும், முன்னாள் டிஎன்பிஎஸ்சி இயக்குனருமான ஆர்.நட்ராஜ் இன்று காலை முதல்வரை சந்தித்தார். அதிமுகவில் சேர்ந்து கொண்ட அவர், கட்சியின் உறுப்பினர் அட்டையை முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

1975ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆர்.நட்ராஜ், இதுவரை பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார். கடந்த 2003 முதல் 2006ஆம் ஆண்டு வரை சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த நட்ராஜ், பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை இயக்குனராக பணியாற்றினார்.

Leave a Reply