காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஒருவரையும், அவரது மகன் ராகுல்காந்தியை எதிர்த்து பிரபல நடிகை ஒருவரையும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் அஜய் அகரால் அவர்களை வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் முன்னாள் தொலைக்காட்சி நடிகை சிம்ரிதி இரானி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
சோனியா மற்றும் ராகுல்காந்தியை எதிர்த்து வலுவான வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.