ஏப்ரல் 1ஆம் தேதியை மட்டும்தான் உலகம் முட்டாள் தினமாக கொண்டாடும். ஆனால் காங்கிரஸ் கட்சி வருடத்தைன் 365 நாட்களையும் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறது. இது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் பரேலியில், குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
“சரியாக படிக்காத மாணவர்கள் பரீட்சைக்கு செல்லும் முன் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வதுபோல, ஐந்து வருடங்கள் ஏழைகளுக்காக ஒன்றும் செய்யாத காங்கிரஸ், தேர்தல் நேரத்தில் ‘ஏழை’, ‘ஏழை’, ‘ஏழை’ என்ற மந்திரத்தை பாடி புலம்புகிறது.. ஆனால் இதை ஏழை மக்கள் எளிதில் உணர்ந்துவிட்டனர். காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்று அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ராகுல் ஏழைகளின் மீது அக்கறை உள்ளது போல பாவனை செய்து வருவதை மக்கள் இனியும் ஏமாற தயாரில்லை. வறுமை என்றால் என்னவென்றே தெரியாத செல்வந்தர் குடும்பத்து ராகுலுக்கு ஏழை என்ற வார்த்தையின் அர்த்தம் கூட தெரியாது