T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த முக்கிய போட்டி ஒன்றி பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்ததால், அரையிறுதிக்கு தகுதி பெறும் முக்கிய லீக் போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் பிராவோ மற்றும் சமியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 166 ரன்கள் குவித்தது. சைமன்ஸ் 31 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இரண்டு ஓவர்களில் 1 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து தங்கள் விக்கெடை பறிகொடுத்தனர். அணியை தூக்கி நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சாஹித் அப்ரிடி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் நான்கு விக்கெட்டுக்கள் நேற்று ஸ்டெம்புடு முறையில் அவுட் ஆனார்கள். பிராவோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அரையிறுதி ஆட்டம் நடக்கவுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மற்றொரு அரையிறுதியில் மோதவுள்ளது.