ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு சென்று போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த குழுவை இலங்கைக்குள் நுழையவிட மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர் பிரதேசங்களில் சென்று சாட்சியங்களை திரட்டுவதற்கு நவநீதம்பிள்ளையின் தலைமையின் கீழ் ஒரு குழு இம்மாதம் இலங்கைக்கு சென்று விசாரணை திட்டமிட்டிருந்த வேளையில் நேற்று இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்சே, நவநீதம்பிள்ளை குழு உள்பட எந்த ஒரு நாட்டு குழுவையும் இலங்கைக்குள் நுழையவிடமாட்டோம் என்றும், தேவைப்பட்டால் அவர்கள் நாட்டிற்கு வெளியே இருந்து தங்கள் விசாரணையை செய்துகொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார்.
ஐ.நா அனுமதி பெற்ற குழுவையே நாட்டிற்குள் அனுமதி கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் கூறியுள்ளதால் இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.