நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட பறக்கும் படையினர், அவருடைய ஹெலிகாப்டரில் எந்த பொருட்களும் இல்லை என்று கூறினர்.
தமிழக தேர்தல் ஆணையர், ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும் ஹெலிகாப்டலும் சோதனை செய்யப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அவருடைய அறிவுரையின்படி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட வருவாய் அதிகாரி கற்பகம், சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே ஆகியோர் நேற்று கோவை வந்த ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை சோதனையிட உத்தரவிட்டனர்.
அவர்களூடைய உத்தரவின்படி, நேற்று ஹெலிகாப்டரில் மதியம் 2.35 மணிக்கு பொள்ளாச்சி வந்த ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை, தாசில்தார் சண்முகராஜ், பறக்கும் படை அதிகாரி பார்த்தீபன் உள்பட அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனைக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த அதிகாரிகள் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் முதல்வரின் ஹெலிகாப்டரில் இல்லை என்று கூறினர்.