ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் த்ரிஷா. தமிழ் அமைப்புகள் கண்டனம்

9இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய விழா ஒன்றில் கோலிவுட் நடிகை த்ரிஷா பங்கேற்றதாக அதிர்ச்சிக்குரிய செய்தி ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள் ராணுவத்திற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கர போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அதுமுதல் இலங்கையிலும், மற்றும் இலங்கை ஆதரவு பெற்ற வெளிநாட்டு நிகழ்ச்சியிலும் கோலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர். மீறி கலந்துகொள்பவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா கனடா நாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழா ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கனடாவின் தலைநகர் டொரண்டோவில் நடைபெற்ற இந்த விழாவை அங்குள்ள தமிழ் அமைப்பு நடத்தினாலும், அந்த அமைப்பு ராஜபக்சேவுக்கு நெருக்கமுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெருக்கமான அமைப்பு என்பதால் இந்த விழாவில்கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு கடும் கண்டனங்கள் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Reply