மாயமான மலேசிய விமானம் MH370 குறித்த தகவல்களை திரட்ட மலேசிய பிரதமர் Najib Razak நேற்று ஆஸ்திரேலியா விரைந்தார்.
மலேசிய விமானம் MH370 காணாமல் போய் ஒரு மாதம் ஆனபின்பும் விமானத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இன்னும் தெளிவாக தெரியாத காரணத்தால் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் மீட்புப்படையினர்களுடன் நேரில் ஆலோசனை செய்ய நேற்று மலேசிய பிரதமர் ஆஸ்திரேலியா சென்றார்.
இந்திய பெருங்கடலில் இதுவரை 85,000 சதுர கிலோ மிட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டையை உலக நாடுகளின் மீட்புப்படை முடித்துவிட்டது. இருந்தும் விமானத்தின் ஒரு துரும்புகூட இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மலேசியாவின் துப்பறியும் அதிகாரிகள் MH370 விமான பைலட்டுகள் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விமானத்தின் தகவல் தொடர்புகள் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டதாகவும், இந்த துண்டிப்பு விமான பைலட்டுகளால் அல்லது பைலட்டுகளின் அனுமதியோடு நடந்திருக்க வேண்டும் என்றும், அதனால் அவர்கள் இருவரையும் முதல் குற்றவாளிகளாக பதிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர், ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருந்தால் அதற்கு விமானிகள் Zaharie Ahmad மற்றும் ShahFariq Abdul Hamid ஆகிய இருவரே பொறுப்பு என்றும் அவர்கள் தங்கள் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்
மலேசியாவின் inspector general of the Royal Malaysian Police Force அமைப்பின் தலைவர் Khalid Abu Bakar, இந்த தகவலை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.