2014ஆம் ஆண்டின் லோக்சபா பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை Centre for the Study of Developing Societies (CSDS)என்ற அமைப்பு எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி இந்திய அளவில் அதிக தொகுதிகள் கைப்பற்றக்கூடிய கட்சியாக அதிமுக விளங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக்கு 234 முதல் 246 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 111 முதல் 123 தொகுதிகள் வரை கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு 206 முதல் 218 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 106 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மாநிலக்கட்சியான மம்தா பானஜர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். அந்த கட்சிக்கு 23 முதல் 29 தொகுதிகள் வரை கிடைக்குமாம். இதை அடுத்து தமிழகத்தின் அதிமுக 4வது இடைத்தை பிடித்துள்ளது. அதிமுகவுக்கு இந்த தேர்தலில் 15 முதல் 21 தொகுதிகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் திமுகவுக்கு 10 முதல் 16 தொகுதிகளும், இடது சாரிகளுக்கு 14 முதல் 20 தொகுதிகளும் கிடைக்கும். தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படும் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றுதான் இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.