கருப்புப்பெட்டியின் இருப்பிடத்தை கண்டுபிடித்தது சீனா. 1 மாதகால தேடுதலுக்கு முற்றுப்புள்ளி?

5aaசீனாவின் அதிகாரபூர்வ நியூஸ் ஏஜன்ஸி ஒன்று நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் சீனாவின் அதிநவீன கப்பல் Haixun 01 என்ற கப்பல் தெற்கு இந்திய பெருங்கடலில் கடலுக்கு கீழே 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மாயமான மலேசிய MH370 விமானத்தின் கருப்புப்பெட்டியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

37.5 Hz என்ற அலைவரிசையில் கருப்புப்பெட்டியின் சிக்னல் கிடைத்துள்ளதாகவும், அது கண்டிப்பாக மலேசிய விமானத்தின் கருப்புப்பெட்டிதான் என்றும் உறுதியாக கூறியுள்ள சீனா, அந்த இடத்தில் விமானத்தின் 20 உடைந்த பாகங்களும் இருப்பதாக கூறியுள்ளது.

உலகின் பல நாடுகளின் மீட்புப்படைகள் இந்திய பெருங்கடலில் சுமார் 84,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு கடலில் தேடுதல் வேட்டையை இதுவரை நடத்தியுள்ளது. கடலின் மிக ஆழமான பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக நடந்துவரும் தேடுதல் வேட்டைக்கு முடிவு கிடைத்துவிடும் நிலை தற்போது உண்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

கருப்புப்பெட்டியின் சிக்னல் வெறும் 90 வினாடிகளே கிடைத்திருப்பதால் இதன் உறுதித்தன்மை குறித்து ஆஸ்திரேலிய அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனாலும் கருப்புப்பெட்டி செயலிழக்கும் முன்னர் கடைசியாக கொடுத்த சிக்னலாக இது இருக்கலாம் என்று ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்துள்ளது.

ஒருவேளை கருப்புப்பெட்டி இருக்குமிடம் தெரிந்தாலும் 3.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு சென்றுதான் அதை மீட்க வேண்டும். சீனாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

 

Leave a Reply