திமுகவை அலட்சியப்படுத்தினால் மக்களை சாபமிடுவேன். கருணாநிதி

9திமுக தலைவர் கருணாநிதி இன்று கோவையில் நடந்த பிரமாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆ.ராசா, வக்கீல் கணேஷ்குமார், பொங்கலூர் பழனிசாமி ஆகியோரை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதில் இருந்து சில கருத்துக்கள்:

தமிழர்களையும் தமிழினத்தையும் காப்பாற்றுவதற்காகவே திமுக தொடங்கப்பட்டது.
நாம் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியாவின் பிரதமர்.

அண்ணா ஏற்றிவைத்த சுடர் விளக்கை அணையாமல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

ஒருவேளை இதுவே நான் கலந்து கொள்கிற கடைசி தேர்தல் பிரச்சாரமாகவும் இருக்கலாம்

திமுகவுக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தால் இன்னும் 50 ஆண்டுகள் வாழ்வேன்.

தமிழகத்தில் மோடிகளுக்கு வேலை இல்லை. மோடி தமிழகத்திற்குள் நுழையவும் முடியாது.

நீங்கள் மீண்டும் மீண்டும் ஏமாற தயாராக இருந்தால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.

திமுகவை அலட்சியப்படுத்தினால் மக்களை சாபம் இடுவதை தவிர வேறு வழியில்லை.

 

Leave a Reply