விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் தயாராகி வரும் கத்தி படம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளிவந்து கோலிவுட்டை கலக்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி படத்தினை ஐங்கரன் மூவீஸ் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது படத்தின் பட்ஜெட் அதிகமாகியுள்ளதால், ஐங்கரன் மூவீஸார், Lyca Productions என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இந்த படத்தின் தயாரிப்பாளராக இணைத்துள்ளது. இதில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த Lyca Productions நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் சுபாஷ்கரன் அல்லிராஜ் என்பவரும், ராஜபக்சேவும் தொழில்முறை பார்னர்களும்கூட. இதனால் கத்தி படத்திற்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சேவும் கத்தி படத்தின் ஒரு மறைமுக தயாரிப்பாளராக கருதப்படுகிறார்
இலங்கையில் வாழ்ந்த லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்த ராஜபக்சேவின் படத்தில் விஜய் நடிப்பதால் தமிழ் அமைப்புகள் கொந்தளித்துள்ளன. இந்த படத்தை தடை செய்யவேண்டும், தமிழ்நாட்டில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் பல தமிழ் அமைப்புகள் போர்க்கொடி எழுப்பியுள்ளது. இதனால் விஜய் மற்றும் முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே துப்பாக்கி படத்தில் முஸ்லீம்கள் எதிர்ப்பை சமாளித்த இந்த ஜோடி,தற்போது ஒருபுதுவித சிக்கலில் மாட்டியுள்ளது. தமிழ் அமைப்புகள் விஜய்க்கு எழுதிய கடிதம் ஒன்றில் விஜய் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மீறி நடித்தால் விஜய் நடிக்கும் அனைத்து படங்களையும் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளது. இதற்கு விஜய் தரும் பதிலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.