வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் பாமகவிற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட எட்டு தொகுதிகளில் திருமாவளவன் நிற்கும் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் நிற்பதற்காக பாமக சார்பில் மணிரத்னம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் ராம்தாஸ் உள்பட பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் நிற்கும் வேட்பாளர்களை 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பது தேர்தல் விதி. ஆனால் சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு செய்திருந்த மணிரத்னத்தின் மனுவை யாரும் முன்மொழியாததால், இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.
ஆனால் சிதம்பரம் தொகுதிக்கு பாமகவின் மாற்று வேட்பாளராக மணிரத்தினத்தின் மனைவி சுதா ஏற்கனவெ மனு தாக்கல் செய்திருந்ததல், அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தற்போது பரிசீலனை செய்து வருகிறார். அவருடைய வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டால், ஒரு தொகுதிக்கு பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளரே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் பாமக அதிர்ச்சி அடைந்துள்ளது.