பொறியியல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?

TY04-APPLICATION2_113540f

பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிடுகிறது.

பிளஸ்-2 தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியிடப்படப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8.45 லட்சத்துக் கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆசைப்படுவது வழக்கம்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்பட இருக்கின்றன.

இடஒதுக்கீடு-சிறப்பு சலுகைகள்

இதர படிப்புகளைப் போன்று பொறியியல் படிப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 12 இடங்கள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகளில் உள்ளவை.

மேலும், ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இடஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகளை பெற வேண்டுமானால், மாணவர்கள் விண்ணப்பிக்கும்போதே அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

என்னென்ன சான்றிதழ்கள் தேவை?

சாதி சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று நகல், மதிப்பெண் தொடர்பான சான்றிதழ் நகல் ஆகியவற்றை அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவை தவிர, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினர் சான்று போன்றவற்றை தகுதியானவர்கள் இணைக்க வேண்டும்.

பொறியியல் விண்ணப்பம் வழங்க தொடங்கிய பி்ன்பு மாணவ-மாணவிகள் மொத்தமாக சான்றிதழ் வேண்டி விண்ணப்பிப்பதால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கி றார்கள். சான்றிதழ்களை விரைவாக பெறுவதற்காக தாலுகா அலுவலகங் களில் அலைக்கழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள் வசதிக்காக…

இந்த நிலையில், பொறியியல் மாணவர்களின் வசதிக்காக என்னென்ன சான்றிதழ்களை விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும் என்ற பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிடுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறுகையில், “விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ் விவரங்கள், மாதிரி சான்றிதழ்களுடன் அடுத்த வாரம் ஆன்லைனில் வெளி யிடப்படும். இதன்மூலம் மாணவர்கள் விண்ணப்பம் படிவம் வாங்குவதற்கு காத்திராமல் உடனடியாக தேவை யான சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பித்துவிடலாம். இதன்மூலம் மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தவிர்த்து, குறிப்பிட்ட சான்றிதழ் களை முன்கூட்டியே வாங்கி விண்ணப்பிக்கலாம்” என்றார்.

Leave a Reply