இரண்டாம் உலகம் படத்தின் படுதோல்விக்கு பின்னர் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பவர் இயக்குனர் செல்வராகவன். தற்போது சிம்புவை வைத்து செல்வராகவன் ஒரு புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளார்.
முன்பின் தெரியாத இருவர் திடீரென சந்தர்ப்ப வசத்தால் திருமணம் ஆகி, அதன் பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் கதையாம். இந்த படமே திருமணத்தில் இருந்துதான் தொடங்குகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே சிம்புவுடன் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு-த்ரிஷா திருமணம் செய்வது போன்ற படப்பிடிப்பு காட்சி வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடக்கவிருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிகவும் பிரமாண்டமாக, திருமணம் மண்டபம் போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செல்வராகவன் கவனித்து வருகிறார்/
சமீபத்தில் ஆர்யா-அமலாபால் திருமணக்காட்சி ஒன்று பார்த்திபன் படத்திற்காக கோவை திருமண மண்டபத்தில் படமாக்கியது அனைவரும் தெரிந்ததே.