டெல்லி பாராளுமன்ற தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை. விஜயகாந்த் கட்சி விளக்கம்.

vijayakanthடெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடநத சட்டசபை தேர்தலில், போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, இந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஏன் போட்டியிடவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அக்கட்சியின் டெல்லி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

எங்கள் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு டெல்லியில் மிகவும் பிரகாசமாக இருப்பதால், தேமுதிக போட்டியிடவில்லை என்றும், மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை என்பதால் டெல்லியில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறினார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் தமிழக கட்சி என்ற பெருமையை தேமுதிக பெற்றுள்ளது என்றும், வருங்காலத்தில் டெல்லி வாழ் தமிழர்களின் நலனுக்காக தேமுதிக பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

தேமுதிக டெல்லியில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2300 ஓட்டுக்கள்தான் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இரண்டு வேட்பாளர்கள் 300 ஓட்டுக்களும், நான்கு வேட்பாளர்கள் 200 ஓட்டுகளும்,பெற்றனர். ஈஸ்வரி என்ற வேட்பாளர் அதிகபட்சமாக 362 ஓட்டுக்களும், ஸ்வர்ணா என்ற வேட்பாளர் குறைந்தபட்சமாக 110 வாக்குகளும் பெற்றனர் என்பது தெரிந்ததே.

Leave a Reply