புடவை, தாவணி, சோளி, ஃபிராக்னு காலேஜ் பொண்ணுங்களோட டேஸ்ட் மாறிட்டே இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் என்ன ஃபேஷன் பிடிக்கும்,. இதுகுறித்து சில இளம்பெண்களிடம் கேட்டபோது..
”இப்போ… த்ரீ ஃபோர்த் பிளவுஸ்… பேக் டு ஃபேஷன்!”னு ரேவதியும், ரோகிணியும் சொல்ல…
”எங்க கிளாஸ்ல சமீபத்துல ‘செட் சாரி’ எடுத்தோம். எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி, த்ரீ ஃபோர்த் மாடல் கை வெச்சு தைச்சோம். போட்டுட்டுப் போனப்போ, திரும்பிப் பார்க்காத ஆளே இல்ல. இனி பாருங்க… எங்களைப் பார்த்து காலேஜே, ஊரே, தமிழ்நாடே, ஏன்… இந்தியாவே இனி இந்த ஃபேஷனை ஃபாலோ பண்ணப் போகுது!”னு பெருமையோடு, அதன் பின்னணி சொன்னாங்க பிரியங்கா.
”எங்க அம்மா ஒரு ஃபேஷன் டிசைனர். அவங்க எனக்கு தைச்சுக் கொடுத்த த்ரீ ஃபோர்த் பிளவுஸை போட்டுட்டுப் போனதை பார்த்துதான், இவங்களுக்கு எல்லாம் இந்த ஐடியாவே வந்துச்சு. ஸோ… எல்லா புகழும் இந்த அஸ்மாவுக்கே!”னு அஸ்மா சொல்ல…
”ஏய்… காஜல், சமந்தா எல்லாம் போடுறதைப் பார்த்து பண்ணின டிசைன்தானே இது. ஓவரா அலம்பாதடி!”னு மீனாக்ஷி புட்டுவைக்க, அஸ்மா முகத்துல பல்பு!
”எங்க வீட்டுல, ‘என்ன இது எங்க காலத்து ஜாக்கெட் மாதிரி தைச்சிருக்கே..?’னு எங்கம்மா கேட்டாங்க. ‘ஃபேஷன் என்பதே ஒரு சக்கரம்தாம்மா’னு சொல்லி புரிய வெச்சேன்!”னு சொன்னாங்க காயத்ரி.
”ஆகமொத்தம், இனி எங்கெங்கு காணிணும் த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் பிளவுஸாதான் இருக்கப்போகுது!”னு அம்மணிகள் சொன்ன ஃபேஷன் ஜோசியத்தை கேட்டுக்கிட்டு, இடம் மாறினோம்.
தாவணி போட்ட தீபாவளிகளா வந்திருந்தாங்க சில கேம்பஸ் கிளிகள்!
”வீட்டுல ஏதாவது விசேஷம்னா, அக்கா, தங்கச்சி, கசின்ஸ்னு எல்லா டீன் பெண்களும் தாவணி கட்டி அமர்க்களப்படுத்திடுவோம். அதிலும் க்ரீன் அண்ட் கோல்ட் கலர் காம்பினேஷன்தான் தாவணியிலயே பெஸ்ட் கலர் காம்பினேஷன். எந்த நிறத்துல இருக்கறவங்களுக்கும் பொருந்தும்”னு சரண்யா குஷியாக,
”தாவணி கட்டும்போது நம்மைப் பார்க்கறவங்களுக்கு, ‘நம்ம ஊருப் பொண்ணு’னு ஒரு ஃபீல் கொடுக்கும். புடவையைக்கூட விதம்விதமா கட்டி அதோட தன்மையை மாத்திடலாம். ஆனா, தாவணியில அது முடியாது. இப்படித்தான் கட்டணும்ங்கிறதுதான் அதோட ஸ்பெஷல். அதேபோல, 60 வயதிலும் புடவை கட்டலாம், சுடிதார் கட்டலாம், ஜீன்ஸ்கூட போடலாம். ஆனா, பதின்ம வயதுல மட்டும்தான் போட முடியும்ங்கறது… தாவணிக்கு மட்டுமே உள்ள சிறப்பு!”னு மொத்தமா ஓட்டுப் போட்டாங்க கமலபிரியதர்ஷினி.
”இப்போ ரெடிமேட் தாவணிகள் பல டிரெண்டில் இருக்கு. ஆனா, பாவாடை, பிளவுஸ், தாவணியை தனித்தனியா வாங்கித் தைக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படித் தைக்கும்போது, பாவாடையோட பார்டர் கலர்ல ஒரு தாவணி, பாடி கலர்ல ஒரு பிளவுஸ்னு மாத்தி மாத்தி போட்டும் வெரைட்டி காட்டலாம்!”னு மஹாலஷ்மி ரசிச்சு சொல்ல,
”ஒருமுறை நான் தாவணி கட்டிட்டுப் போனப்போ, பாட்டி ஒருத்தவங்க எங்கிட்ட வந்து, ‘அந்தக் காலத்துல நாங்க எல்லாம் தாவணி, சீலதான் கட்டுவோம். இப்போ தாவணி போடுற புள்ளைகளையே பாக்க முடியல. உன்னை தாவணியில பாக்கும்போது சந்தோஷமா இருக்கு கண்ணு’னு கொஞ்சினாங்க. அதில் இருந்து வார்ட்ரோபை திறக்கும்போது, அடிக்கடி என் கை தாவணியை எடுத்துடும்!”னு சென்ட்டிமென்ட்டா முடிச்சாங்க நிவேதா.
ரியாவுக்கு இஷ்டம், மினி ஃபிராக்! ”இப்போ டிரெண்ட் பிளாக் அண்ட் வொயிட் காம்பினேஷன்தான். அது தர்ற ஜீப்ரா லுக், ஸோ க்யூட். பொதுவா நாம போடுற டிரெஸ்தான் நம்மோட ஆட்டிட்யூடை காட்டும். அந்த வகையில, ‘நான் ரொம்ப சுதந்திரமானவள்’னு காட்டக்கூடிய டிரெஸ்… ஃபிராக்!”னு சொன்னாங்க ரியா.
ஜெய்ப்பூர் பெண்ணான பிரியங்காவுக்கு, சோளிதான் ஃபேவரைட். ”பாரம்பரியம் ப்ளஸ் மாடர்னிட்டி ரெண்டும் கலந்ததுதான் சோளி. வடஇந்திய உடையான இது, தமிழ்நாட்டிலும் இந்தளவுக்கு ரீச் ஆகியிருக்கிறதுக்கு காரணம், அதோட அழகுதான்! திருமணங்கள், விசேஷங் கள்னு அணியற இந்த உடை கிராண்டாவும், பாரம்பரியமாவும் இருக்கறது இதோட ஸ்பெ ஷல்!”னு ஆசையா சொன்னாங்க பிரியங்கா.
எந்த டிரெஸ் போட்டாலும், டீனா இருந்தா… பியூட்டிதான் போங்க!