சூர்யா, சமந்தா நடிக்கும் அஞ்சான் படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆட கரீனா கபூரை முதலில் கேட்டதாகவும், அவர் கால்ஷீட் கிடைக்காததால், அவருக்கு பதிலாக Chitrangada Singh என்ற பாலிவுட் நடிகை நடனம் ஆடியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து சமீபத்தில் மும்பை ஆங்கில பத்திரிகை ஒன்று கரீனா கபூரிடம் கேட்டபோது, “சூர்யா என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. லிங்குசாமி என்ற இயக்குனரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அப்படியிருக்கும்போது எப்படி இதுமாதிரியான ஒரு வதந்தி கிளம்பியது என்றே எனக்கு தெரியவில்லை.
மேலும் எனக்கு இந்திப் படங்களில் மட்டுமே நடிக்க விருப்பம். தென்னிந்திய படங்களிலோ அல்லது ஹாலிவுட் படங்களிலோ நடிக்கும் எண்ணம் இல்லை என்றார்.
தென்னிந்தியாவில் சூர்யா ஒரு மிகச்சிறந்த நடிகர். இந்தியிலும் அவர் Rakta Charitra என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கும்போது அவரை தெரியாது என்று கூறுகிறீர்களே என்று கேட்டபோது, அதற்கு கரீனா கபூர், உண்மையிலேயே சூர்யா யார்? என்று தனக்கு தெரியாது என்றும், அப்படி தெரிந்திருந்தாலும், அவருடன் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.