சூர்யா, சமந்தா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தில் கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போகிறார் என்ற செய்தியை அறிந்த கரீனா கபூர் “யார் இந்த சூர்யா, சூர்யாவை எனக்கு தெரியாது:” என்று பதிலளித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
கரீனா கபூரின் இந்த பதில் சூர்யாவின் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கரீனா கபூரை கடுமையாக விமர்சனம் செய்து சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கரீனா, தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளார்.
சூர்யாவை இதுநாள்வரை நான் நேரில் சந்தித்தது இல்லை என்ற அர்த்தத்தில்தான் நான் அந்த கேள்விக்கு பதில் கூறினேன். மற்றபடி தமிழில் மிகப்பெரிய நடிகர் சூர்யா என்பது நான் அறியாததது அல்ல. இன்னும் சொல்லப்போனால் சூர்யா தமிழில் நடித்த சிங்கம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நான் நடித்துள்ளேன். எனவே நான் சூர்யாவை யார் என்று கேட்டதாக வந்த தகவல் உண்மையல்ல. சூர்யாவின் நடிப்பை நான் ரத்த சரித்திரத்தில் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கூறியுள்ளார்.
( “It is a fact that I’ve never met him! But that doesn’t mean I don’t know who Suriya is. Of course I know him. He’s a big star in Tamil cinema, in fact one of the biggest. And I truly respect his standing in the Indian film industry. In fact I’m doing the sequel to Singham the film where he played the lead originally in Tamil cinema. He is tremendously talented. It’d be a pleasure and an honour to work with him”)