விஜய் பேச்சை தட்டமுடியாமல் நடிக்கிறேன். ஸ்ரீதேவி உருக்கம்

100

ரஜினி மற்றும் கமல் கேட்டுக்கொண்டபோதே நடிக்க மறுத்த முன்னாள் பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி, விஜய் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது படத்தில் நடிக்க ஒப்புகொண்டார். இதனால் கோலிவுட் படவுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

கோச்சடையான் படத்தின் டான்ஸராக நடிக்க வந்த வாய்ப்பையும், உத்தம வில்லன் படத்தின் ஒரு முக்கிய கேரக்டரையும் உதறித்தள்ளினார் ஸ்ரீதேவி. ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தொலைபேசியில் நேரடியாக பேசியபோதும், தனக்கு நடிக்க விருப்பமில்லை என்று கூறி இருவரையும் தவிர்த்துவிட்டார் ஸ்ரீதேவி.

ஆனால் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீதேவி விஜய் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டார். சிம்புதேவன் ஸ்ரீதேவியை நேரில் சந்தித்து கதையை கூறியபோது வேண்டா வெறுபாக கதையை கேட்ட ஸ்ரீதேவி, இந்த கேரக்டர் மிகவும் அருமையாக இருக்கிறது, ஆனால் எனது மகள்கள் நடிப்பதற்கு ரெடியாக இருக்கும் இந்நேரத்தில் நான் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். ஆனால் விஜய் தொலைபேசியில் ஸ்ரீதேவியிடம் நேரில் பேசியதால், விஜய்யின் பேச்சை தட்டிக்கழிக்க விரும்பாமல் உடனடியாக கால்ஷீட் கொடுத்துவிட்டார். கோலிவுட் முழுவதும் பரபரப்பாக இந்த பேச்சுதான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது..மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply