இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, இளையதளபதி விஜய் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தபோதே விஜய்யை மோடி சந்திக்க விரும்பியதாகவும், அந்த சமயத்தில் விஜய், ஐதராபாத்தில் ‘கத்தி’ படப்பிடிப்பில் இருந்ததால் சந்திக்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.
இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் கோவையில் நடக்க உள்ள நிலையில் மோடி-விஜய் சந்திப்பு நடக்கவுள்ளதாக பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர்கள் கூறுகின்றனர். பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்துகொள்வாரா? பாரதிய ஜனதா கட்சியில் சேருகிறாரா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் சில மணிநேரங்களில் தெரிய வரும்.
விஜய் கடந்த சில வருடங்களாக அதிமுக, திமுக போன்ற கட்சிகளின் ஆட்சியால் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். எனவே ஒரு பாதுகாப்பான அரசியல் களத்தில் இறங்க அவர் சமயம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், இதுதான் அதற்கான சரியான சமயம் என விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி, மற்றும் விஜய் ஆகியோர் அடுத்தடுத்து பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு கொடுக்க உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.