ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பம். முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி.

1

7 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் அபுதாபியில் தொடங்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை அணி கொல்கத்தா அணியுடன் மோதியது.

அபுதாபியில் உள்ள  Sheikh Zayed Stadium, என்ற மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் கல்லீச் 72 ரன்களும், பாண்டே 64 ரன்களும் குவித்தனர். மும்பை அணியின் சார்பில் மலிங்கா மிக அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஜாஹீர் கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, முதல் போட்டியிலேயே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 122 ரன்களே எடுத்தனர். கொல்கத்தா அணியின் பவுலர் நாரின் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.   கல்லீஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கத்தா அணியின் வெற்றி குறித்து அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Pepsi IPL Gala Dinner, Abu DhabiPepsi IPL S7 - Match 1 MI v KKR

Leave a Reply