61வது தேசிய விருது அறிவிப்பு. தங்க மீன்கள் படத்திற்கு 3 விருதுகள்

thanga meengal

61 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் வெளியான தங்க மீன்கள், தலைமுறைகள் ஆகிய படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழில் சிறந்த படமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘தங்க மீன்கள்’ திரைப்படம் விருது பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற  ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ‘ என்ற பாடல் தேசிய விருதை பெற்றது. இந்த பாடலை எழுதிய முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் இந்த படத்தின் நடித்த  சாதனா,  விருதை  சாதனா சிறந்த குழந்தை நட்சத்திர விருதினை தட்டிச் சென்றது.. தங்க மீன்கள் படத்திற்கு மட்டும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் காலமான இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’ என்ற திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் தத் விருது பெற்றது.,

தமிழின் சிறப்பு விருதுக்கான படமாக தர்மம் என்ற படம் பெற்றது.

ஜோசப், சிறந்த எடிட்டருக்கான விருதை வல்லினம் படத்திற்காக பெற்றுள்ளார்.

தேசிய அளவில் சிறந்த படமாக  ‘ஷிப் ஆப் தீஷிஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குனர்: பிரஞ்சால் துவா, படம் – சிதியா உத், (இந்தி)

சிறந்த நடிகர்: ராஜ்குமார் ராவ் மற்றும்  சுரஜ் வெஞ்சராமடு ஆகிய இருவரும் பகிர்ந்துள்ளனர்.

சிறந்த இசையமைப்பாளர்: ஜாட்டிஷ்வர், படம் – பெஸ்ட் மேக்கப் (பெங்காலி)

சிறந்த பின்னணி பாடகர்:  ஜாட்டிஷ்வர், படம்- பெஸ்ட் மேக்கப் (பெங்காலி)

சிறந்த பொழுபோக்கு திரைப்படம்: ‘பாக் மில்கா பாக் ( இந்தி)

சிறந்த நடிகை: கீதாஞ்சலி தபா( படம்: லையர்ஸ் டைஸ்)

சிறந்த சமூக பிரச்னைகளை சித்தரிக்கும் படம்: தோஜியா தர்ம் கவுன்ச்சா

சிறந்த இந்தி படம்: ஜாலி எல்எல்பி

Leave a Reply