கவிழ்ந்த கப்பலில் இருந்து மாணவன் அனுப்பிய எஸ்.எம்.எஸ். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

4aநேற்று காலை தென்கொரியாவில் பயணிகள் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த 470 பயணிகளில் 287 பேர்களின் கதி என்ன என்று இன்னும் தெரியவில்லை. இதுவரை ஒன்பது பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு பகலாக நூற்றுக்கணக்கான மீட்புப்படை வீரர்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் 100 பேர் பள்ளி மாணவர்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி ஆகும்.

இந்நிலையில் கப்பல் பயணிகளின் உறவினர்கள் கரையில் தங்கி தங்களுடைய உறவினர்கள் குறித்து மீட்புப்படையினர்களிடம் அவ்வப்போது தகவல்கள் கேட்டு அறிந்து வருகின்றனர். இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள மாணவர் ஒருவரிடம் இருந்து சற்று முன்னர் ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் தான் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தன்னை போல பலர் கப்பலில் சிக்கியுள்ளதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக அந்த மாணவருடைய தாயார் மீட்புப்படையினர்களிடம் வந்து கூறியுள்ளார்.

இதனால் மீட்புப்படையினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவன் தாங்கள் இருக்கும் இடம் இருட்டாக இருப்பதாகவும், மிகவும் பயமாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த எஸ்.எம்.எஸ் ஐ பார்த்து அந்த மாணவரின் தாயார் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைப்பதாக இருந்தது.

அந்த மாணவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இதுதான். ‘There are few people on the ship, can’t see a thing, it’s totally dark. So there are few men and women, women are screaming,and we are not dead yet, so please send along this message.’

4

Leave a Reply